பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதுவரை 4 கட்டதேர்தல்கள் முடிந்து உள்ளன.பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராண தொகுதியில் 7-வது கட்டமாக இறுதியில் ஜூன் 1- ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் வாரணாசி தொகுதி சிறப்பு கவனம் பெற்று உள்ளது.
வாரணாசி தொகுதி
இந்த நிலையிலி பிரதமர் மோடி இன்று(14ந்தேதி) வாரணாசி தொகுதியில் போட்டியி வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு பிரதமர் மோடி கங்கை நதிக்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
அவர் வேதமந்திரங்கள் முழங்க கங்கையில் பால் ஊற்றியும் தீபாராதனை காட்டியும் வழிபட்டார். இதைத்தொடர்ந்து அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பண்டிட் ஞானேஸ்வர்
அப்போது மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் உத்திரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன்சென்றனர். பிரதமர் மோடியின் வேட்புமனுவை பண்டிட் ஞானேஸ்வர், பைஜ்நாத் படேல், லால் சந்த் குஷ்வாகா, சஞ்சய் சோங்கர் ஆகியோர் முன்மொழிந்து இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது பிரதமர் மோடியுடன் அவர்களும், யோகி ஆதித்யநாத்தும் சென்றனர். அப்போது முன்வரிசையில் பண்டிட் ஞானேஸ்வர் மோடியின் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.
வாரணாசி தொகுதி பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியின் கோட்டை ஆகும். மோடி ஏற்கனவே 2014 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார். தற்போது அவர் 3 வது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.
அன்புமனி ராமதாஸ்-ஜி.கே.வாசன்
பிரதமர் மோடிக்கு எதிராக உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் களத்தில் உள்ளார். வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக அஜய் ராய் களமிறங்குவது இது 3வது முறையாகும். கடந்த 2019 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி 6.74 லட்சம் வாக்குகளைப் பெற்று இருந்தார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனு தாக்கல் முடிந்ததும் பிரதமர் மோடி பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதில் பா.ம.க. தலைவர் அன்புமனி ராமதாஸ், த.மா.க.தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்றனர்.