வாரத்தின் கடைசி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.7,600 குறைந்தது. ஒரு சவரன் ரூ.1,19,200 விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,900 விற்பனைது.
வெள்ளி கிராமுக்கு ரூ.55 குறைந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.55,000 ஆயிரம் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.350 விற்பனை ஆனது. வெள்ளிக்கிழமை ஒரு கிலோ வெள்ளி ரூ.4,15,00 விற்பனை ஆனநிலையில், இன்றைய தினம் ஒருகிலோ வெள்ளி ரூ,3,50,000-க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் மாலையில் மீண்டும் வெள்ளி கிராமுக்கு ரூ.30 குறைந்து இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிலோவிற்கு ரூ.30,000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,20,000 விற்பனை ஆகிறது. ஓரே நாளில் வெள்ளி கிலோவிற்கு ரூ.85 ஆயிரம் குறைந்து இருப்பது குறிப்பிடதக்கது. தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு
தங்கம் சவரனுக்கு ரூ.9600 குறைந்தது. கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைவு
வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை ஆகிறது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
