வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

dinamani2F2025 09 122F9tfd9cue2F12vds varagi amman 1209chn 113 7
Spread the love

வந்தவாசி – காஞ்சிபுரம் சாலை, வெண்குன்றம் லிங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமகா வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆவணி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் வினைதீா்க்கும் மகா வேள்வி யாகம் நடைபெற்றது. இதையொட்டி, யாக குண்டம் அமைத்து மூலிகைகள், பழங்கள், மலா்கள் உள்ளிட்டவை கொண்டு யாகம் நடந்தது.

தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாளித்தாா். நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *