தெலங்கானா மாநில அரசின் “Gaddar’ திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று (மார்ச்.19) நடந்தது.
இதில் ‘தி கேர்ள் ஃபிரெண்ட்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராஷ்மிகா மந்தனா பெற்றார்.
இந்நிலையில் விருது வாங்கியது குறித்து ராஷ்மிகா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நான் சிறுவயதில் இருக்கும்போது, மாநில அளவில் யாராவது விருதுகளை பெற்றால் நான் அவர்களை ஒரு சூப்பர் ஸ்டாரைப் பார்ப்பது போலத் தான் பார்ப்பேன்.
இவர்கள் எப்படி சாதித்தார்கள்? அவர்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்?’ என்றெல்லாம் யோசிப்பேன்.