எனினும், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளால் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் மூலம் டிஸ்க்குகளை அனுப்பும் DVD வாடகை நிறுவனமாக நிறுவப்பட்ட Netflix, இப்போது ஸ்ட்ரீமிங் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அணுகும் முறை மாற்றமடைந்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம்.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சமீபமாக சரிந்துவரும் நிலையில் இந்த ஒப்பந்தம் அதன் பங்குவிலையை உயர்த்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த இணைப்பு மிகப் பெரியதாக இருந்தாலும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹெச்.பி.ஓ மேக்ஸ் ஓடிடி தளங்கள் பகிரப்பட்ட (overlap) சந்தாதாரர்களையே அதிகம் கொண்டிருப்பதனால் உடனடியாக மிகப் பெரிய லாபம் இருக்காது எனக் கூறப்படுகிறது.
மிக முக்கியமாக இந்த இணைப்பின் மூலம் பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர் வுமன், பென் 10, லூனி ட்யூன்ஸ் கதாப்பாத்திரங்கள், ரிக் அண்ட் மார்டி, ஸ்கூபி டூ, கான்ஜூரிங், மார்டல் காம்பேட் உள்ளிட்ட பல பாத்திரங்களின் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் அடைகிறது. இது ரசிகர்களுக்கு விரும்பத்தக்க திருப்பமாக அமையலாம்.