சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த மாா்ச் 2-இல் பவுனுக்கு ரூ.920, மாா்ச் 3-இல் பவுனுக்கு ரூ.1,560 குறைந்தது. மார்ச் 4 -இல் பவுனுக்கு ரூ.2,120 குறைந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.15,120-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1.20,960-க்கும் விற்பனையனது.
ஆனால், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.95 லட்சத்துக்கும் விற்பனையானது.
நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,680க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ. 14,960க்கு விற்பனை ஆனது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து 5 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை வார கடைசி நாளான இன்று மீண்டும் உயர்ந்துள்ளது தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,050 விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
