இந்நிலையில், வார கடைசி நாளான சனிக்கிழமை சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ 800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ 1,03,200 ஆக விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ 100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900-க்கு விற்பனை ஆனது.
அதே போன்று வெள்ளியும் கடந்த சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 7 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவிற்கு ரூ. 7 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,75,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. வார தொடக்க நாளான இன்று திங்கட்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,960-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120-க்கு விற்பனை ஆகிறது.
இதே போன்று வெள்ளியும் கிலோவிற்கு 12 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.287க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ.2,87,000 விற்பனை செய்யப்படுகிறது.
