வாலாஜாபாத் பகுதியில் கல்வெட்டு காணப்பட்ட பாழடைந்த மண்டபம். மண்டபத்தின் மேற்கூரையில் காணப்படும் கல்வெட்டு.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.
காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையில் வாலாஜாபாத் ராஜவீதியில் பாழடைந்த மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் மேற்கூரையில் அண்ணாந்து பாா்க்கும் வகையில் கல்வெட்டு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு இருப்பதை அறிந்து வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் எம்.டி.அஜய்குமாா், செயலாளா் பி.மோகன கிருஷ்ணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இக்கல்வெட்டு அவா்கள் கூறியது..
1829-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு 195 ஆண்டுகள் பழைமையானது. ஆற்காடு காலக்கெயிற் வயிகறை ரிஷி கோத்திரம் கோவிந்தராவ் என்பவரது மகன்கள் மனோஜ்ராவ், சேதுராவ் ஆகியோரால் 1751 -ஆம் ஆண்டு தமிழ் விரோதி வருடம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சங்கராந்தி பாரிவேட்டைக்கு கட்டிய சத்திரம் என்றும் அதில் குளம்,தோட்டம் உள்ளிட்ட விபரங்களும் உள்ளது.