வால் நட்சத்திரத்தில் கலன் இறங்கும் இடம் அடையாளம் காணப்பட்டது

Spread the love

நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளது ரொசெட்டா

பட மூலாதாரம், Airbus

படக்குறிப்பு, நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளது ரொசெட்டா

ஆளில்லா விண்கலமான ரொசெட்டா, தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றில், எங்கு இறங்கி பரிசோதனைகளைச் செய்யும் என்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தேர்தெடுத்துள்ளனர்.

’67P’ என்று பெயரிடப்பட்டுள்ள, நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட அந்த வால் நட்சத்திரத்தின் நூற்றுக்கணக்கானப் படங்களை ஆராய்ந்த பிறகே, ரொசெட்டா இறங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் அந்த விண்கலம் தரையிறங்க, ஒப்பீட்டளவில் சமமாகவுள்ள ஒரு இடத்தையே தாங்கள் தேர்தெடுதுள்ளதாக, விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

குறைந்த ஈர்ப்புச் சக்தி

ஃபிலே என்று அழைக்கப்படும் அந்தச் சோதனைக் கருவி , பனிப்பாறைகளைக் கொண்ட தளமொன்றில், திருகாணிகள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு நிலை நிறுத்திக் கொள்ளும்.

ரொசெட்டா விண்கலம்
படக்குறிப்பு, ரொசெட்டா விண்கலம்

அந்த வால் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை மிகவும் குறைவாக உள்ளதால், ரொசெட்டா விண்கலம் அங்கு இறங்கி நிற்பது இயலாத ஒன்று.

எனினும் இந்தச் சோதனை முயற்சியில் பல விஷயங்கள் தவறாகப் போகக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள இந்த முயற்சி, முற்றாக தானியிங்கி இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் செயல்படுத்தப்படும்.

தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் தொலைவில் அப்போது ரொசெட்டா இருக்காது என்றும், அது மிக மிக தொலைவில் இருப்பதாலேயே இந்த ஏற்பாடு எனவும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *