முன்பே இத்திரைப்படம் வெளியாகும் எனப் படத்தின் வெளியீடு தேதியை அறிவித்திருந்தனர். இப்போது டிசம்பர் 18-ம் தேதி ரிலீஸுக்கு வேலைகள் நடந்து வருகின்றன. ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரிலீஸ் இதுதான்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே. சூர்யா எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.
அருண் விஜய், சித்தி இத்னானி ஆகியோர் நடித்திருக்கும் ‘ரெட்ட தல’ திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படமும் டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
கீதா கைலாசம், ‘வடசென்னை’ சரண் ஆகியோர் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனுபமா பரமேஷ்வரனின் ‘லாக்டவுன்’ திரைப்படமும் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
டிசம்பர் மாதம் விமல் நடித்திருக்கும் இரண்டு படங்கள் திரைக்கு வருகின்றன. அவர் நடித்திருக்கும் ‘மகசேனா’ திரைப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரைக்கு வருகிறது.
மேலும், ‘களவாணி’, ‘வாகை சூட வா’,’மஞ்சப்பை’, ‘களவாணி 2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் ‘கலாட்டா பேமிலி’ திரைப்படமும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள்.