திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டி வழியாக செல்லும் வைகை ஆற்றின் கரையோரத்தில் புகழ்பெற்ற ஆஞ்சிநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திதி கொடுப்பது போன்ற காரியங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. புனித தலமாக விளங்கும் இந்த கோவில் அருகில் இருக்கும் வைகை ஆற்றில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திதி கொடுப்பாதோடு, குளித்த பின் அவர்களின் உடைகளை ஆற்றிலேயே விடுவது வழக்கம்.
இதனால் ஆற்றின் கரை ஓரத்தில் பெருமளவில் ஆடைகள் சேர்ந்து அசுத்தமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், கோயிலை சுற்றி உள்ள உணவகங்களில் இருந்து வரும் கழிவுகள் நெகிழி குப்பைகள் அனைத்தையும் ஆற்றிலேயே கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு குளிக்கும் பக்தர்களுக்கு தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அவருடைய விளக்கத்துடன் 10-12-2025 தேதி அன்று விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.