விக்கிரவாண்டியில் திமுக தொடர்ந்து முன்னிலை!

Dinamani2f2024 072f1c48640a E46a 4354 B86b 9d3194a278ce2fsiva.avif.avif
Spread the love

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இரண்டாவது சுற்றில் அன்னியூர் சிவா முன்னிலையில் இருக்கிறார்; 12002 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரைத் தொடர்ந்து, பாமகவின் சி.அன்புமணி 5904 வாக்குகள் பெற்று இரண்டாவதாக உள்ளார். நாம் தமிழர் கட்சியின் பொ.அபிநயா வெறும் 849 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளார்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா முன்னிலையில் இருக்கிறார்; 5564 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அவரைத் தொடர்ந்து, பாமகவின் சி.அன்புமணி 2894 வாக்குகள் பெற்று இரண்டாவதாக உள்ளார். நாம் தமிழர் கட்சியின் பொ.அபிநயா வெறும் 303 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், பிற்பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்றது

1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *