விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி உயிரிழந்தார்.
இடைத்தேர்தல்
இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டமன்ற தொகுதி காதலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
அதன்படி விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்றும், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூன் 14-ம் தேதியும், வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டது .
மேலும், மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதியும்,மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 -ம் தேதியும் கடைசி நாள் ஆகும். அன்றே தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
பொதுவாக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே பெரும்பாலும் வெற்றி பெறும் என்பதால் அந்தத் தொகுதி மக்கள் பணமழை கொட்டும் என்று எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் உள்ளனர் .
அன்னியூர் சிவா
இதனால் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலை எதிர்பார்த்து அந்த தொகுதி மக்கள் காத்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க.வின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.