விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் யாருக்கும் ஆதரவு இல்லை

Vijay
Spread the love

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பா.ம.க., நாம் தமிழர் என்று மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலைப் புறக்கணித்துவிட்டது. அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் விலகிவிட்டது.

தமிழக வெற்றிக் கழகம்

இதனால் அந்த கட்சிகளின் ஓட்டுகள் மொத்தமாக யாருக்கு விழும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புதிதாக கட்சி ஆரம்பித்து உள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஏற்கனவே விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக செயல்படுவதாக அறிவித்து இருந்தார்
இந்த நிலையில்தவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Pussy

புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தளபதி விஜய் அவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 2 ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

போட்டியிடாது

கழகத் தலைவர் அவர்கள், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:

நீட் தேர்வில் 0.001% கூட அலட்சியம் இருக்ககூடாது- உச்ச நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *