விக்கிரவாண்டி: இன்று வாக்கு எண்ணிக்கை

Dinamani2f2024 072fd01a3eb3 2655 445f 9755 2e378d085ff02f12vpmp4 1207chn 7.jpg
Spread the love

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (ஜூலை 13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜூலை 10-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் பொ.அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின.

20 சுற்றுகள்: வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணியும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெறும்.

இதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டுசெல்லும் பணிக்கு கிராம உதவியாளர்கள், இதர பணிகளுக்காக வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், இதர பணியாளர்கள் என மொத்தம் 150 பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *