விக்சித் பாரத் திட்டத்தில் அனைத்து மாநிலங்களின் பங்கும் அவசியம்: பிரதமர் மோடி

Dinamani2f2024 072fab3accc5 1c20 4582 A65d F65addd1728b2fani 20240722144718.jpg
Spread the love

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்குமான லட்சியம்.

மாநில அரசுகள்தான், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதால், மாநிலங்கள் இந்த திட்டத்தின் இலக்கை அடைய ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்.

இந்த நூற்றாண்டானது, தொழில்நுட்பம் மற்றும் புவியியல் மாற்றங்களுக்கானது. இவை அனைத்துமே நமக்கான வாய்ப்புகள். இந்த மாற்றங்களை இந்தியா தனது முன்னேற்றப்பாதைக்காகப் பயன்படுத்திக்கொண்டு, சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை மைல்கல்லாக இதுவே இருக்கும்.

2047ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்படும்.

மத்திய அரசின் திட்டங்கள், நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதே இலக்கு என்றும் மோடி கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *