விக்ரமுக்கு இப்படியொரு ரசிகர்களா?

Dinamani2f2025 04 062fuy424yke2fpage.jpg
Spread the love

நடிகர் விக்ரம் தன் ரசிகர்களுடன் இருக்கும் விடியோ வைரலாகியுள்ளது.

தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படம் கடந்த மார்ச் 27 திரையரங்குகளில் வெளியானது.

அதிரடியான ஆக்சன் படமாக உருவாகியிருந்த வீர தீர சூரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 55 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளது.

முக்கியமாக, கடந்த சில ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களில் ரசிகர்களைக் கவரும் கமர்ஷியல் அம்சங்களுடன் இந்தப் படமே இருந்ததாக அவரது ரசிகர்கள் கூறினர்.

இந்த நிலையில், படம் பார்த்த ஒரு குடும்பத்தினர் ‘நாங்கள் சியானின் மிகத்தீவிரமான ரசிகர்கள்’ என்றனர். அதில், ஒரு சிறுவன் பிறந்தததிலிருந்தே நான் சியானின் ரசிகன் என்றது விக்ரம் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, நேர்காணலுக்கு அழைப்பதுபோல் அக்குடும்பத்தை அழைத்த படக்குழுவினர், அவர்களிடம் கேள்விகேட்கும்போது திடீரென அறைக்குள் நுழைந்த விக்ரம், அவர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்தார். இதை சற்றும் எதிர்பாராத அக்குடும்பத்தினர் விக்ரமைச் சுற்றி கட்டியணைத்து, காலில் விழுந்து விக்ரமைத் திக்குமுக்காட வைத்தனர்.

இதையும் படிக்க: எம்புரானில் நடித்த இந்த நடிகர் யார் தெரியுமா?

இந்த விடியோவை பகிர்ந்த விக்ரம், “யெய்யா சாமி!! ஒரு ரசிகனோட அன்பு.. அப்பேன், அம்மே, ஆச, காதல், கத்திரிக்கா.. எல்லாத்தியும் விட பெருசு ஆத்தோய்..!! I am nothing without you!!” என நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *