‘விஜயகாந்தின் தேமுதிகவுக்கும், கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கும் எவ்வளவு வாக்குகள் இருக்கிறது?’ நேர்காணலில் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்வி |“DMDK & MNM Vote Strength?” – Stalin’s Key Question in DMK Interviews

Spread the love

கறார் காட்டிய முதல்வர்

கடந்த முறை கொங்கு மண்டலத்தில் திமுக பலத்த அடி வாங்கியிருந்தது. அதனால் நேர்காணலில், இந்த முறை உள்ளடி வேலைகள் எதுவுமின்றி நிர்வாகிகள் ஒன்றிணைந்து யாரை வேட்பாளராக அறிவிக்கிறோமோ அவருக்காக வேலை செய்ய வேண்டுமென முதல்வர் கறாராக கூறியிருக்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கென உள்ளே வரும் விண்ணப்பத்தாரர்களிடம் தொகுதி நிலவரம் குறித்தும் முதல்வர் கேட்டு தெரிந்துகொள்கிறார்.

வேட்பாளர் நேர்காணல்

வேட்பாளர் நேர்காணல்

அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் தொகுதிகளுக்காக நேர்காணலுக்கு சென்றவர்களிடம், “தொகுதியில் தேமுதிக, மநீமவுக்கு எவ்வளவு வாக்குகள் இருக்கும்?’ என குறிப்பாக கேட்டிருக்கிறார்.

இரண்டு கட்சிக்கும் தலா 2000-3000 வாக்குகள் வரை இருக்குமென உடன்பிறப்புகள் தெரியப்படுத்தியிருக்கின்றன. அதேமாதிரி, கொங்கு மண்டலத்தில் விஜய்யின் தவெக கொஞ்சம் வலுவாக இருப்பதாகவும், விஜய் பிரிக்கப் போகும் வாக்குகளும் நமக்கு சாதகமாகவே அமையும் என்றும் சில நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். அதையும் முதல்வர் உன்னிப்பாக கேட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *