மத்திய அரசால் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பத்ம விருதுகள்
ஆண்டுதோறும் மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களின் பெயர்க விருதுக்காக பரிந்துரைக்கப்படுகின்றன.
விருது வழங்கும் குழுவால் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறுபவர்கள் விபரங்களை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி, நடந்த முதல்கட்ட விருது வழங்கும் விழாவில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, டென்னிஸ் வீரர் ரோகன் போபன்னா, பாடகி உஷா உதூப் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் திரபுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

2-வது கட்டமாக
இந்த நிலையில் இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் 2-வது கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரபுபதி முர்மு பங்கேற்று பத்ம விருதுகளை வழங்கினர்.
விஜயகாந்த்-சீரஞ்சிவி
கலைத் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக மறைந்த நடிகரும், தே.மு.தி.க கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.அப்போது பிரேமலதா விஜயகாந்த் ஒரு நொடி மேலே பார்த்து கண்கலங்கினார்.
இதேபோல் தெலுங்கு நடிகர் சீரஞ்சிவி, நடிகை வைஜெயந்திமாலாவுக்கு பத்ம விபூஷன், மறைந்த பாத்திமா பீவிக்கு பதம்பபூஷன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவுக்கு பத்மஸ்ரீ,அந்தமான் நிகோபார் தீவுகளை சேர்ந்த பெண் விவசாயி கே செல்லமாளுக்கு பத்ம ஸ்ரீ விருது விருதுகளை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த 5 பேர்
இதில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பத்ம விருதுகளை பெற்றனர்.நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.