சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் மா.செ வி.எஸ் பாபு பேசுகையில், ‘முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதி பெரம்பூர்தான்.
இந்தத் தொகுதியிலிருந்துதான் முதல்வர் வரப்போகிறார்.
திமுக, அதிமுகவில் வட்டச் செயலாளர் பதவி வாங்கவே 25 வருடம் குடும்பத்தை விட்டு விட்டு சாக வேண்டும். ஆனால், தவெகவில்தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் கூட மாவட்டச் செயலாளர் ஆக முடியும்.

திமுக, அதிமுகவினர் என்ன செய்வார்கள் என எனக்கு தெரியும். பொதுச்செயலாளர் மட்டும் உத்தரவிட்டால் நான் அத்தனை பேரையும் ஓட விட்டு விடுவேன். திரு.வி.க நகர், துறைமுகம், பெரம்பூர் தொகுதியெல்லாம் தவெகவுக்குதான். தலைவரை மட்டும் ஒரு நான்கைந்து முறை தொகுதிக்கு பிரசாரத்துக்கு அழைத்து வந்து விடுங்கள்’ என்றார்.

‘பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து நிற்பவர்கள் அத்தனை பேரும் டெபாசிட் இழப்பார்கள்’ என்றார் செங்கோட்டையன்