விஜய்யின் ‘ஜனநாயகன்’, ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கா? -இயக்குநர் அனில் ரவிபுடி |Is Vijay’s ‘Jananayakan’ a remake of ‘Bhagavanth Kesari’? -Director Anil Ravipudi

Spread the love

இப்படத்தின் புரோமோஷன் நிகழ்வு ஒன்றில் நடிகர் வி.டி.வி. கணேஷ், “விஜய் சார் ‘பகவந்த் கேசரி’ படத்தை பலமுறை பார்த்துவிட்டார். இயக்குநர் அனில் ரவிபுடியிடம் அப்படத்தை ரீமேக் செய்யவும் கேட்டார்.

ஆனால், இயக்குநர் அவர் ரீமேக் செய்யமாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.” என்ற தகவலைக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ‘ஜனநாயகன்’ ரீமேக் திரைப்படம் எனப் பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால், படக்குழுவினர் ரீமேக் தொடர்பான எந்தத் தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தப் பொங்கல் பண்டிகைக்கு இயக்குநர் அனில் ரவிபுடியின் மற்றொரு படம் திரைக்கு வருகிறது.

அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் “‘ஜனநாயகன்’ படம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்குப் பதில் தந்த இயக்குநர் அனில் ரவிபுடி, “விஜய் சார் ஒரு ஜென்டில்மேன்.

அவருடைய ஃபேர்வெல் படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா இல்லையா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும்.

அதுவரை இதை தளபதி விஜய் படமாகவே கருதுவோம்.” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *