ஆதவ்வின் பவர் பாய்ண்ட்டுக்கு பிறகு மேடையேறிய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும், ‘ட்ரெண்டெல்லாம் நமக்கு சாதகமா இருக்கு. அடுத்த மூணு மாசம் நீங்கெல்லாம் கொஞ்சம் புஷ் பண்ணி ஹார்டு ஒர்க் போட்டா மட்டும் போதும்’ என்றிருக்கிறார். ஆனால், விவரமறிந்த கள யதார்த்தம் புரிந்த சில மா.செக்கள், ‘பெரும்பாலான மாவட்டங்களுக்கு தலைவர் இன்னும் வரவே இல்லை. கட்சியின் செயல்பாடுகள் வேகமெடுக்கவே இல்லை. பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் புகைந்து கொண்டிருக்கிறது. அதை தீர்த்து வைக்கவும் வழி இல்லை. அப்படியிருக்க மேடைக்கு மேடை லாஜிக்கே இல்லாமல் இரண்டு இரண்டு சதவீதமாக அதிகரித்து காட்டி நாமே பெருமிதப்பட்டுக் கொள்வதில் என்ன இருக்கிறது?’ என தங்களுக்குள்ளேயே புலம்பியிருக்கின்றனர்.

அடுத்ததாக பேசிய புஸ்ஸி ஆனந்த்தான் மா.செக்களை காய்ச்சி எடுத்திருக்கிறார். ‘போஸ்டிங் போடுறதுல ஏன் அவ்வளவு குழப்பம் பண்ணீங்க. தினசரி ஒவ்வொரு மாவட்டத்துல இருந்தும் நாலு க்ரூப் பஞ்சாயத்து பண்ணி வைக்க சொல்லி வராங்க.