இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில், “தவெகவில் இணைந்தும் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் வைத்திருப்பது ஏன்” என்ற கேள்விக்குப் பதிலளித்த செங்கோட்டையன், “நான் 50 ஆண்டுகளுக்கு மேல் அதிமுகவில் இருந்திருக்கிறேன். கட்சிக்காக உண்மையாக உழைத்து அம்மா ஜெயலலிதாவால் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறேன்.
பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கத்தான் நினைத்தேன். ஆனால் என்னை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டார்கள். இப்போது தமிழ்நாட்டில் புதிய மாற்றம், தூய்மையான அரசியல் வேண்டும் என தவெகவில் இணைந்திருக்கிறேன்.

அதிமுக கலர் கொண்ட உடையைக்கூட அணியக் கூடாது என்று என்மேல் வழக்குப் போட்டுவிட்டார்கள். இல்லையென்றால் அதையும் அணிந்து வந்திருப்பேன் என்னுடைய சட்டைப் பையில் நான் மதிக்கும் ஜெயலலிதா புகைப்படத்தை வைப்பது என்பது என்னுடைய உரிமை.
நான் மாற்றியிருந்தால் ‘இவனெல்லாம் என்ன தியாகி, கட்சிக்காக உழைத்தவனா, கொள்கைப் பிடிப்பு இல்லாதவன், கட்சித் தாவிவிட்டான், சட்டைப் பையில் இருந்த அம்மா படத்தையும் மாற்றிவிட்டான்’ என்று விமர்சிப்பார்கள்.
அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்கள் விஜய்யின் வாகனத்தில் அலங்கரித்து வருகிறது. என்னுடைய வாகனத்திலும், சட்டைப் பையிலும் அம்மா ஜெயலலிதா படம் வைத்திருப்பேன். அது என்னுடைய உரிமை. அதை தவெகவினரும் ஏற்றுக் கொண்டார்கள்” என்று பதிலளித்திருக்கிறார் செங்கோட்டையன்.