விஜய்யின் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? நடிகை ஆவேசம்!

dinamani2F2025 09 282F6ullieoa2FG13fvg6aQAA4pKm
Spread the love

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், தவெக தலைவர் விஜய் மீது நடிகை கயாது லோஹர் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை கயாது லோஹர் தனது எக்ஸ் பக்கத்தில்,

“உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூர் பேரணியில் எனது நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்தேன். இவை எல்லாம் தவெகவின் சுயநல அரசியலுக்காக. விஜய், உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?’’ என்று பதிவிட்டுள்ளார்.

கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்… பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!

Karur Stampede: Actress Kayadu Lohar slams TVK Leader

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *