நீதிமன்றம் நிபந்தனை விதித்த போதும் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்கிறார்கள். தர்காவை இடிப்பதுதான் அவர்களது நோக்கம். ஓட்டுப் பொறுக்குவதற்காக அரசியலுக்கு வரவில்லை. நாளையே விசிக இருப்பது பிரச்னை என திமுக கருதினால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம், ஐ டோண்ட் கேர்…
பூர்ணசந்திரன் குடும்பத்தினர் விழிப்பாக இருந்து, நீங்கள் அரசியல் செய்யுமிடம் இதுவல்ல என இந்து அமைப்புகளை விரட்டியுள்ளார்கள். திருப்பரங்குன்றத்தை உங்களால் அயோத்தியாக மாற்ற முடியாது, உ.பி-யில் இருப்பதைப்போல அல்ல, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் பெரும்பான்மையாக உள்ளோம்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றி விட்டால் கல்வி, சோறு எல்லோருக்கும் கிடைத்து விடுமா? எய்ம்ஸ் வந்து விடுமா? அது சர்வே கல், நாயக்கர் காலத்தில் நடப்பட்ட அளவைக் கல். உச்சி பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தூணில்தான் 400 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கம் நிறைந்த மலை. சங்கிகள் நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறையில் இருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் இந்துக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இல்லை. அது பிராமணர்களால், பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அண்ணாமலை, நயினார், தமிழிசை, பொன்னார் புரிந்துகொள்ள வேண்டும். பிராமண கடப்பாறையைக் கொண்டு திராவிடத்தை இடிப்போம் எனச் சொன்ன சீமான், தமிழ் தேசியம் பேசவில்லை, பிராமண தேசியம் பேசுகிறீர்கள்.
இப்போது இருவரை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். ஒருவர் விஜய், இன்னொருவர் சீமான். திமுக ஒரு தீய சக்தி என்கிறார் விஜய். திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்-காகத்தான் விஜய் கட்சித் துவங்கியிருக்கிறார், தமிழ்நாட்டு மக்களுக்காகத் துவங்கவில்லை.
திமுகவை மட்டுமல்ல பெரியார், அம்பேத்கர் பேசிய அரசியலை வீழ்த்துவதற்காகப் பேசுகிறீர்கள். விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது” என்றார்.