விஜய்யை தொடர்ந்து மீண்டும் டாப் ஹீரோவை இயக்கும் ஹெச்.வினோத்? தள்ளிப்போகிறதா தனுஷ் காம்போ? |EXCLUSIVE

Spread the love

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ இம்மாதம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்து ஹெச்.வினோத் தனுஷை இயக்குவார் என்ற பேச்சு இருந்தது. தனுஷ் இப்போது ‘போர்த்தொழில்’விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இதனை முடித்துவிட்டு அவர் ஹெச்.வினோத்தின் படத்திற்கு வருவார் என எதிர்பார்ப்பு உள்ளது.

Dhanush

ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் சாய் அபயங்கர், ச்ரிலீலா அப்டேட்களை தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவர உள்ளன. அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. டி55 படத்தை முடித்துவிட்டு டி56 படமாக ஹெச்.வினோத் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இப்போது டி56 படத்தை ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து இயக்குவார் என்றும் இதனை அடுத்தே ஹெச்.வினோத்தின் படத்திற்கு தனுஷ் வருகிறார் என்கிறார்கள்.

அதாவது தனுஷ்- ஹெச்.வினோத் கூட்டணியின் படம் ‘டி57’ என்றும் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் தான் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.

இந்த இடைவெளியில் இயக்குநர் ஹெச்.வினோத் இன்னொரு பெரிய ஹீரோ ஒருவரின் படத்தை இயக்குவார் என்றும் அதனை முடித்து விட்டே தனுஷின் படத்திற்கு வருவார் என்றும் ஒரு தகவல் வருகிறது. இது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் கிடைத்தவை.

இயக்குநர் அ.வினோத்

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அடுத்தாண்டு தள்ளிப்போவது உண்மைதான். இடையே பல மாதங்கள் இருப்பதால் இந்த இடைவெளியில் டாப் ஹீரோ ஒருவரை அவர் இயக்குகிறார். பெரிய ஹீரோக்கள் இரண்டு பேரிடம் வினோத் கதை சொல்லியிருப்பதாகவும், அந்த ஹீரோக்கள் இருவருக்குமே கதை பிடித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக, இன்னும் சில வாரத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியானாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *