‘விஜய் அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்’ – காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி Vijay become Political power said Praveen Chakravarty

Spread the love

கோவையில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அதிக சீட், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு ஆகிய 3  முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் எதிர்காலத்திற்காக வைக்கப்படும் கோரிக்கை. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த இது தேவையா, இல்லையா என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும். காங்கிரஸ் ஜனநாயக ரீதியான கட்சி. காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் கோரிக்கையை வைக்கலாம். கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை இறுதி முடிவு எடுக்கும். தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது உண்மை என ஏற்கனவே கூறிவிட்டேன். அவருடன் என்ன பேசினேன் என்பதை தற்போது சொல்ல முடியாது.

விஜய்யை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. 2 பேர் சந்தித்து பேசக் கூடாதா. நான் தனிப்பட்ட முறையில் விஜய்யை சந்தித்தேன். இப்படி டெல்லியில் பலரை சந்திக்கிறேன். தமிழகத்தில் தான் அதை கேள்வி கேட்கிறார்கள். விஜய்  கூட்டத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகிறார்கள். விஜய்யை மக்கள் நடிகராக பார்க்கவில்லை. ஒரு அரசியல்வாதியாக பார்ப்பதற்கு தான் வருகிறார்கள். அதை யாராலும் மறுக்க முடியாது. விஜய் ஒரு அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *