விஜய் அரியலூர் செல்வதில் தாமதம்!

dinamani2F2025 09 132Fn5bq17kl2Fvijay ariyalur
Spread the love

அரியலூர்: திருச்சியில் மக்களைச் சந்தித்து பரப்புரையில் ஈடுபட்ட பின், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் அரியலூர் வந்தடைந்தார்.

எனினும், தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் செல்வதற்கு தாமதமாகி வருகிறது. அங்கு திரளான தொண்டர்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க நெடுநேரமாக காத்திருக்கின்றனர். விஜய் அரியலூருக்குச் செல்வதில் தாமதமானதால் அவர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு எப்போதுதான் வரப் போகிறார் என்று முனுமுனுப்பதையும் கேட்க முடிகிறது.

முன்னதாக, திருச்சியில் சனிக்கிழமை(செப். 13) பிற்பகல் பிரசாரத்தை தொடங்கிய விஜய், அங்கிருந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அரியலூா் வந்தார். இதனைத்தொடா்ந்து அங்கிருந்து, கல்லங்குறிச்சி சாலை வழியாக புறவழிச்சாலை சென்று பெரம்பலூா் மாவட்டம் குன்னம் செல்ல உள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *