`விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?' – செல்லூர் ராஜூ கேள்வி

Spread the love

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  பெத்தானியாபுரம் 63 வது வார்டு ஈபி காலனியில்  புதிய நியாய விலைக் கடையை  முன்னாள் அமைச்சர்  செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “திமுக போல் தோல்வி கண்ட கட்சி கிடையாது. தொண்டர்களுக்கு கடிதம் எழுதி கட்சியை வளர்த்தவர் கலைஞர் கருணாநிதி. ஆனாலும் கூட்டணி இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது.

விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?. கரூர் துயர சம்பவத்தில் பிறகு மக்கள் அதிகமாக கூடுவார்கள் காரணத்தை கூறி பொதுவெளிக்கு வராமல் இருப்பது தவறு. காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால்,  மத்திய போலீஸ் வாங்கி பரப்புரைக்கு செல்லலாமே.

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காமல் அவர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தது கொடுமையானது. பொது வாழ்க்கையில் இப்படியெல்லாம் ஒரு நடைமுறையை பார்த்ததே இல்லை.

செல்லூர் ராஜூ

கருணாநிதி ஜெயிக்க காரணமாக இருந்தவர் எம்ஜிஆர்.  நடிகர் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும்.

சகோதரர் விஜயை நாங்களாக திட்டவில்லை. எங்களை திட்டினார் நாங்கள் திட்டினோம். தற்போது தவெக வினர் பேசியதை வாபஸ் பெற்றுள்ளனர். அதேபோன்று நாங்களும் அவர்களை பற்றி பேச மாட்டோம். அறைக்குள் அரசியல் செய்தால் எப்படி.

ஓ.பன்னீர்செல்வம் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதை கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது. ஊடகம் வழியாக தான் கேட்க வேண்டுமா? அவர் நடத்தும் நாடகத்தை எல்லாம் மக்கள் பார்த்து சலித்து விட்டார்கள். இந்த நாடகமெல்லாம் வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *