“விஜய் ஆதரவுடன் ரூ.5,000 கோடி சம்பாதிக்கப் பார்த்தார் எடப்பாடி!” – செங்கோட்டையன் பகீர் புகார். | “Edappadi sought to make rs.5,000 crore with Vijay’s support!” – Sengottaiyan

Spread the love

விஜய் ஆதரவுடன் முதல்வராகி 5000 கோடி ரூபாய் சம்பாதிக்கத் திட்டமிட்டார் எடப்பாடி பழனிசாமி என செங்கோட்டையன் விமர்சித்திருக்கிறார்.

ஈரோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “நடிகர் விஜய்யின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகி, சுமார் ரூ.5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். அந்த முயற்சியை நான் முறியடித்ததால் என் மீது அவருக்கு கோபம் உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவியையும், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் விட்டுக் கொடுத்ததே நான்தான். எனக்குப் பின் கட்சிக்கு வந்து பதவிகளை அனுபவித்துவிட்டு, உழைத்தவர்களையே இப்போது நீக்கி வருகிறார்.

அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
KURUZ THANAM

எனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யச் சொல்லும் அளவுக்கு அவர் இறங்கிச் சென்றிருப்பது, அவரது தோல்வி பயத்தைக் காட்டுகிறது. ஏற்கெனவே 10 முறை தோல்வியைக் கண்ட பழனிசாமி என்பார்கள் அவரை. எடப்பாடி பழனிசாமி நாட்டை ஒரு கம்பெனி போல நடத்தப் பார்க்கிறார். அவரின் மகனும், மச்சானும் பதவிக்கு வரத் துடிக்கிறார்கள். இது மக்கள் நலனுக்கான இயக்கம் அல்ல, ஒரு குடும்ப கம்பெனி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *