இதனைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து, இன்று மாலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு விஜய் செல்லவுள்ளார்.
அங்கு, தவெகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
கரூர் சம்பவம் நடைபெற்று முதல்முறையாக விஜய் தவெக தலைமை அலுவலகம் செல்லவுள்ளது அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.