விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படம் எப்படி இருக்கு? \ How is ‘Kaathal Reset Repeat’ directed by Vijay and starring Madhumkesh and M.S. Bhaskar?

Spread the love

இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் அதிதி (ஜியா ஷங்கர்) “ஃப்ளை ஹை’ என்ற மியூசிக்கல் பேண்டில் பாடகியாக இருக்கிறார்.

அதில் இருக்கும் ஹரிச்சந்திரனுக்கும் (அர்ஜுன் அசோகன்) அதிதிக்கும் காதல். நாயகன் சித்தார்த் (மதும்கேஷ்) அதிதி எங்கே சென்றாலும் அவருக்குத் தெரியாமல் ஃபாலோ செய்வது, வீட்டின் வாசலில் வந்து நிற்பது என வன்தொடர்தலோடு தீவிரமாக ஒன் சைடு லவ் செய்கிறார்.

அதிதியும், ஹரிச்சந்திரனும் ஸ்காட்லாந்தில் நடக்கும் இசைப்போட்டியில் கலந்துகொள்ள திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் வீட்டில் கல்யாண பேச்சு எடுக்க, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஸ்காட்லாந்து செல்கிறார்கள்.

அதிதிக்குத் தெரியாமல் சித்தார்த்தும் ஸ்காட்லாந்து வரை பின்தொடர்கிறார். அங்கே மூவருக்கும் நடக்கும் சம்பவங்களே விஜய் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் கதை.

Kadhal Reset Repeat Review | காதல் ரீசெட் ரிபீட் விமர்சனம்

Kadhal Reset Repeat Review | காதல் ரீசெட் ரிபீட் விமர்சனம்

நாயகன் மதும்கேஷ், நாயகி ஜியா ஷங்கர் இருவருக்குமே இது அறிமுக படம். யாரிடமும் அவ்வளவு பேசாத, சற்று ஒதுங்கியே இருக்கும் இன்ட்ரோவெர்ட் இளைஞனாக மதும்கேஷ். கேரக்டர் ஓகே. அதற்கென்று நடிப்பிலும் இன்ட்ரோவெர்ட்டாக இருந்தால் எப்படி? நடிப்பில் பயங்கரமாக ஸ்கோர் பண்ணக்கூடிய கதாபாத்திரம் இல்லைதான். ஆனால், ஸ்கோரே பண்ணாமல் இருப்பது நெருடல். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *