‘விஜய் ஒரு ஸ்டார்…’ – கரூர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம் என்ன? | What was the discussion about karur incident in Karur court explained

Spread the love

கரூர்: “முதல்​வர், மற்ற தலை​வர்​களைப் ​போல நினைத்து விட்​டீர்​களா? விஜய் ஒரு ஸ்டார். அவரைப் பார்க்க ஏராள​மானோர் வருவார்கள். அதை கணிக்க தவறி​விட்​டீர்​களா?” என்று தவெக தரப்புக்கு கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்.27-ல் நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் ஆகியோர் மீது கரூர் நகர போலீ​ஸார் 5 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வந்​தனர்.

இதில் தலைமறை​வாக இருந்த மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், அவருக்கு அடைக்​கலம் கொடுத்த கட்சி நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோரை திண்​டுக்​கல் மாவட்​டம் குஜிலி​யம்​பாறை​யில் தனிப்​படை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். பின்​னர் அவர்​களை கரூர் குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில், நீதிபதி பரத்​கு​மார் முன்​னிலை​யில் நேற்று ஆஜர்​படுத்​தினர்.

இரு​வரை​யும் 15 நாள் நீதி​மன்ற காவலில் வைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். இதையடுத்​து, இரு​வரும் திருச்சி மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். முன்னதாக, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்ற விவாதங்களின் விவரம்:

நீதிபதி பரத்குமார்: “விஜய் பரப்புரையை காண 10 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என கணித்ததே தவறு. நீங்​கள் உங்​கள் தலைவரை முதல்​வர், மற்ற தலை​வர்​களைப்​போல நினைத்து விட்​டீர்​களா? அவர் ஒரு ஸ்டார். அவரைப் பார்க்க ஏராள​மானோர் வருவார்​கள். அதை கணிக்க தவறி​விட்​டீர்​களா?”

கரூர் டிஎஸ்பி செல்வராஜ்: “பிற்பகல் 3 மணிக்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது.”

நீதிபதி (தவெகவினரிடம்): “நிர்வாகிகள் யாரும் தகவலை உங்கள் தலைவருக்கு சொல்லவில்லையா? கூட்டம் அளவை கடந்து சென்றது என தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை?”

தவெக: “கூட்ட நெரிசலுக்கு பின்னால் அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரை யாரையும் கைது செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும். விஜய் பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்தது தானாக வந்த கூட்டம். யாரையும் அழைத்து வரவில்லை.”

நீதிபதி: “அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு சொல்லப்பட்டதா?. அவரவர் உயிரை காப்பாற்ற அவரவர் ஓடுகின்றனர். தவறு யார் மீது உள்ளது சொல்லுங்கள்.”

டிஎஸ்பி செல்வராஜ்: “பிரச்சார வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்தவுடன் போதும் என்றேன். ஆனால், ஆதவ் அர்ஜுனாதான் இன்னும் முன்னே செல்வோம் என்றார். முனியப்பன் கோயில் பகுதியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தார். அப்போது விஜய் கேரவன் உள்ளே சென்று விட்டார். அங்கேயே விஜயை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும். விஜயின் வாகனம் உள்ளே சென்றபோதுதான் நெரிசல் ஏற்பட்டது.”

நீதிபதி: “விஜய்யை பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டும். நீங்கள் கேட்ட 3 இடமுமே கூட்டத்துக்கு போதுமானதல்ல. இதே இடத்தில் பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சி தலைவரை பார்க்க வந்தவர்கள் அவர்களது கட்சியினர். ஆனால், விஜயை பார்க்க அனைவரும் வருவார்கள். காலாண்டு விடுமுறை, வார விடுமுறை உள்ள நிலையில் ஏன் இவ்வளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை” என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

அப்​போது, போலீ​ஸார் தங்​களை ஒரு​மை​யில் பேசுவ​தாக நீதிப​தி​யிடம் தவெக​வினர் முறை​யிட்​டனர். அதற்கு நீதிப​தி, “அவர்​களை அடிக்​கவோ, ஒரு​மை​யில் பேசவோ கூடாது” என போலீ​ஸாருக்கு அறி​வுறுத்​தி​யதுடன், இரு​வரை​யும் 15 நாள் நீதி​மன்ற காவலில் வைக்க உத்​தர​விட்​டார். இதையடுத்​து, இரு​வரும் திருச்சி மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *