விஜய் குறித்தும் சிவகார்த்திகேயன் குறித்தும் பேசிய நடிகர் சூரி | Actor Soori has spoken about Sivakarthikeyan’s growth and the film ‘Mandadi’

Spread the love

இந்நிலையில் இன்று மதுரை மாட்டுத்தாவணியில் அம்மன் உணவகத்தை திறந்து வைத்திருக்கிறார் நடிகர் சூரி. அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “மதுரையில் 12 வது அம்மன் உணவகத்தின் கிளையை மாட்டுத்தாவணியில் திறந்து வைத்துள்ளேன். முழுக்க முழுக்க என் குடும்பத்தின் ஆதரவின் காரணமாக உணவகத்தை நடத்தி வருகிறேன்” என்றார்.

நடிகர் சூரி

நடிகர் சூரி

விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனா? என்பது குறித்து பேசிய சூரி, “யாருக்கும் யாரும் போட்டி கிடையாது. விஜய் அண்ணன், விஜய் அண்ணன் தான். SK தம்பி, SK தம்பி தான். எல்லோருக்கும் மக்கள் ஆதரவு உள்ளது. விஜய் அண்ணன் உச்சத்தில் உள்ளார். தம்பி சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார்

யாருக்கும் யாரும் போட்டியாளர்கள் இல்லை. தங்களது வேலையை திறம்பட செய்தாலே எல்லாம் சரியாக இருக்கும். இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது.

நான் எனது முழு உழைப்பை அதில் போட்டுள்ளேன். மீனவர்கள் குறித்து பேசும் இதுபோன்ற கதையை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் விரைவில் வெளியாகும். அதேபோல இயக்குநர் ராம் உடன் ஒரு படம் தயாராகி கொண்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார் சூரி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *