“விஜய் கேட்ட நியாயமான கேள்விகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்வோம்”- தமிழிசை | tamilisai on tvk vijay speech

Spread the love

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (மார்ச். 4) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் இன்று விஜய் தஞ்சாவூர் கூட்டத்தில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவேன் என்று கூறுவதை விட தம்பி விஜய் முதலில் தனக்கு வரும் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், நமக்கு பின்னால் வரும் தொண்டர்களை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து.

தவெக விஜய்

தவெக விஜய்

இன்றைய கூட்டத்தில் எலெக்ஷன், எமோஷன் என்றெல்லாம் பேசியிருந்தார். ஆனால் தமிழ்நாடு புரொமோஷன் அடைய வேண்டும் என்றால் அதற்கு என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.

தம்பி விஜய் இன்றைக்கு பேசியதை பார்த்தேன். நன்றாகத் தான் பேசியிருந்தார். சில கேள்விகள் நியாயமாகக் கேட்டார். மாநில அரசால் முடியாது என்று தெரிந்தும் நீட் விலக்கு என்று ஏன் சொன்னீர்கள்? என்பது உள்ளிட்ட நியாயமான கேள்விகளை கேட்டிருந்தார்.

அதனால் அவர் கேட்ட நியாயமான கேள்விகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்வோம். தமிழ்நாடு அணி, டெல்லி அணி என்று அவர் விளையாட்டாக பேசியதை எல்லாம் தவிர்த்து விடுங்கள். அதுதான் என்னுடைய கருத்து” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *