ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று குரல் எழுப்பியதுடன், தவெக தலைவர் விஜய்யையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழக அரசியலில் பேசுபொருளானார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தரவுப் பிரிவு மற்றும் புரொபஷனல்ஸ் காங்கிரஸ் தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து புகைச்சல் ஏற்படுவதற்கு தொடர்ந்து அவர் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணம். சமீபத்தில் டெல்லியில் கூட்டணி தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகும், கூட்டணி குறித்த சர்ச்சை ஓயவில்லை. இந்நிலையில், பிரவீன் சக்கரவத்தி அவர்களை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்….