விஜய் செங்கோட்டையன் சந்திப்பு : அமைப்பு பொதுச்செயலாளர் பதவி தர வாய்ப்பு – Kumudam

Spread the love

அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் அவரை கட்சி பதவியிலிருந்து எடப்பாடி நீக்கினார். இதை தொடர்ந்து தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் சசிகலா, தினகரன், பன்னீர்செல்வத்தை செங்கோட்டையன் சந்தித்தார்.

இதன் காரணமாக அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையன் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி நீக்கினார். இந்த நிலையில், தவெக இணைவது தொடர்பாக செங்கோட்டையன் தரப்பு மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்த்து

அந்த பேச்சுவார்த்தையில் கோபிசெட்டி பாளையத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, ஆதரவாளர்களுக்கு பதவி உள்ளிட்ட டிமாண்ட்களை செங்கோட்டையன் தரப்பு தவெக முன்வைத்தது. இந்த டிமொண்ட்கள் அனைத்துக்கும் விஜய் ஓகே கூறினார்.

இதை தொடர்ந்து தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் இன்று காலை ராஜினாமா செய்து இருந்தார். நாளை தவெகவில் இணைய உள்ள நிலையில், செங்கோட்டையனுக்கு என்ன பதவி வழங்குவது என பட்டினபாக்க இல்லத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜய் மாலை ஆலோசனை மேற்கொண்டார்.

சிறிது நேரத்தில் ஆதவ் அர்ஜூனா காரில் செங்கோட்டையன் ஆலோசனை நடைபெறும் பட்டினபாக்க இல்லத்திற்கு வருகை தந்தார். அங்கு தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செங்கோட்டையனுக்கு தவெகவில் அமைப்பு பொதுச்செயலாளர் பதவி தருவது தொடர்பாக கூறப்பட்டதாகவும், அதற்கு செங்கோட்டையன் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தவெக தரப்பில் கூறப்பட்டுகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *