இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இணைப்பது வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வைத்த கோரிக்கைக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துள்ளார்.
இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இதையும் படிக்க: அண்ணா பல்கலை. வழக்கு- ஞானசேகரனை காவலில் எடுக்கும் காவல்துறை
விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ”நல்லகண்ணுவின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்பில் மகேஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.