'விஜய் தான் களத்தில் இல்லை' – தமிழிசை செளந்தரராஜன் கடும் தாக்கு

Spread the love

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம்,

“திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக போராடி பூர்ணசந்திரன் என்பவர் தீக்குளித்து இறந்துள்ளார். இதற்கு முதலைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

திருப்பரங்குன்றம் மதம் பிரச்னை அல்ல. இது ஈகோவால் எழுந்துள்ள பிரச்னை. இதில் நீதிபதியை குற்றம் சாட்டுவது மிகவும் தவறான போக்கு. முருக பகவான் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக சிலர் கூறுகிறார்கள். அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து பெண் அரசியல்வாதியான நான் பேச முடியாது. எல்லாவற்றையும் மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். 2026 தேர்தலில் ஸ்டாலின் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தமிழிசை செளந்தரராஜன்

மஞ்சளுக்காக தனி வாரியத்தை அமைத்தது பாஜக தான். எனவே மஞ்சள் நகரத்து மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். விஜய் தன் 10 வயதில் இருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதாக சொல்கிறார். எனில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவை செய்து வரும் எங்களுக்கு எந்தளவு மக்கள் தொடர்பு இருக்கும் என்பதை அவர் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் களம் குறித்து விஜய் பேசியுள்ளார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் விஜய் தான் களத்தில் இல்லை. திடீர், திடீரென வருகிறார். திடீர், திடீரென காணாமல் போகிறார். எனவே விஜய் அவரைப் பற்றிதான் சொல்லியுள்ளார் என்று நினைக்கிறேன்.

பாஜக நாட்டின் பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. நநேந்திர மோடி சிறந்த பிரதமராக உள்ளார். அதனால் விஜய் சொல்வது பாஜகவுக்கு பொருந்தாது. திமுக ஆட்சியில் மகாத்மா காந்தியை உரிய முறையில் கொண்டாடவில்லை. அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடி கூட ஏற்றவில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. காந்திக்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *