`விஜய் நல்ல கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் தாக்கம் உண்டாகும்’ – சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

Spread the love

அமமுக திருப்பூர் தெற்குத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பழைய ஓய்வூதியத் திட்டம், பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர வேலையாக்குவோம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம், அரசு மருத்துவர்களுக்கும், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவசாயிகள் என அனைத்துதரப்பு மக்களுக்கு தி.மு.க. சொல்லிய வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் இன்னும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி பலத்தில் இருப்பதால் எதிர்ப்பவர்கள் சரிசெய்துகொள்ள வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அசுர பலத்துடன் உள்ளனர். அவர்களை வீழ்த்த எதிர்ப்பவர்கள் சரியாகத் திட்டமிட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பிளவுபட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி வந்துள்ளது. திமுக-வை விரட்ட வேண்டும் என்ற கட்சிகள், தங்களை சரி செய்துகொண்டு தேர்தலை எதிர்கொண்டால் திமுக-வை வீழ்த்தலாம்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் 4 முனை போட்டிதான். செங்கோட்டையன் போன்றவர்கள் கூட்டணிக்காக இன்றைக்கு பலமுயற்சிகளை செய்வதாக தகவல்கள் வருகின்றன. நகராட்சித்துறை உட்பட பலதுறைகளில் ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. வெற்று, விளம்பர ஆட்சி. ஒருசிலர் சுயநலத்தால் விழுதுகள் போன்றவர்களே வெளியேற்றப்படுகிறார்கள். எங்களையெல்லாம் சுயநலத்துக்காக நீக்கிவிட்டு சர்வாதிகாரமாக சுயநலம் என்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த அதிமுக இயக்கத்தின் தொண்டர்களும், நிர்வாகிகளும் மன வருத்தத்திலும், அதிருப்தியிலும் இருக்கிறார்கள். தேர்தல் தரும் பாடம்தான், கட்சிக்கு மறுமலர்ச்சி தரும் பாடமாக இருக்கும். செங்கோட்டையன் எங்களுடன் வரவேண்டும் என எப்படிச் சொல்ல முடியும்? அவர் ஒருவழியில் செல்கிறார். இழைக்கப்பட்ட துரோகத்துக்கு நியாயம் தேடுவது மனித இயற்கை. நாட்டு நடப்பை, யதார்த்தத்தைச் சொல்கிறேன். எவ்வித பொறாமையும், அச்சமும் இன்றி தவெக குறித்து சொல்கிறேன். வளர்ந்து வருகிற கட்சியாகத் தெரிகிறது. மறைந்த விஜயகாந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல் இந்த தேர்தலில் விஜய்யும் ஏற்படுத்துவார். விஜய் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று சொல்லவில்லை. திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக அன்றைக்கு விஜயகாந்த் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

பல தோல்விகளில் வெற்றி, தோல்விக்கும் காரணமாக இருந்தார். நல்ல கூட்டணியை விஜய் அமைத்தால், அது தாக்கத்தை உண்டாக்கும். என்னுடைய அரசியல் அனுபவத்தில் பேசுகிறேன். ஆனால், அமமுக இடம்பெறும் கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக இருக்கும். அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்போம். 2024-ம் ஆண்டு மோடி பிரதமராக வேண்டும் என நிபந்தனையற்ற ஆதரவை அளித்தோம். 3-ஆம் முறையாக மோடி பிரதமராக வரும்போதுதான், நாடு வல்லரசாகும் என்று நினைத்தோம். மோடிக்கும், பாஜக-வுக்கும் எங்களுக்கும் எவ்வித கசப்பும் இல்லை” என்றார் தினகரன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *