தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திருந்தது. இதில் பேசிய மரிய வில்சன் தொகுதி மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி பேசியிருந்தார்.

மரிய வில்சன் பேசியதாவது, “‘கடந்த 8 நாட்களாக ஆர்.கே.நகரைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். எல்லா மக்களிடமும் உரையாடியிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரிய துரோகத்தை இரண்டு கட்சிகளுக்கும் இந்த மக்களுக்கு நிகழ்த்தியிருக்கிறது.