விஜய் பிறந்தாள் ஜூன் 22-ல்  ‘ஜனநாயகன்’ ரிலீஸ்? படதயாரிப்பு நிறுவனம்  புது ப்ளான்  – Kumudam

Spread the love

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் ‘ஜனநாயகன்’. விஜயின் கடைசிப் படமான இதில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் தள்ளிப்போனது.

தணிக்கை வாரியத்தின்மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்ற போதிலும், இப்படத்தை revising committee எப்போது பார்க்கிறார்கள் என்ற விவரம் எதுவும் இன்னும் சொல்லப்படவில்லை. ஆகவே கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும் இப்படத்தின் வெளியீடு எப்போது என்பதில் இன்னும் எந்த தெளிவும் இல்லை. 

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள விஜய் நடித்த கடைசிபடம்  ‘ஜனநாயகன்’. விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அப்படி தேதி அறிவிக்கப்பட்டால் கட்சி தலைவராகவும், வேட்பாளராக இருக்கும் விஜய் நடித்த  ‘ஜனநாயகன்’ படத்திற்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்கும். அதனால் படதயாரிப்பு நிறுவன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. 

அதன்படி `ஜனநாயகன்’ விஜய் பிறந்த தினமான ஜூன் 22-ம் தேதி வெளியிடுவது என முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விஜய் தரப்பில் படதயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *