“விஜய் மணிப்பூருக்கு என்னோடு வரத் தயாரா?” – அண்ணாமலை கேள்வி | Annamalai questions TVK Vijay

1342592.jpg
Spread the love

சென்னை: “விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால் அவரோடு நானும் செல்வதற்கு தயாராக இருக்கிறேன். மணிப்பூரில் என்ன நடக்கிறது, அங்கிருக்கும் பழங்குடி மக்கள் யார்? காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அங்கு உயிரிழந்தோர் எத்தனை பேர்? தற்போது உயிரிழந்தோர் எத்தனை பேர்? போன்ற பொது அறிவு தகவல்களை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேறு ஆளே கிடைக்கவில்லையா? அந்த புத்தகத்தை பெற்றுக் கொண்ட ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்ப்புற நக்சல். தமிழக அரசியல் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பது கேள்விக்குறி.

திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று புறக்கணித்துவிட்டார். ஆனால் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் அந்த நிகழ்ச்சிக்கு போயிருக்கிறார் என்றால் கட்சி திருமாவளவன் கையில் இருக்கிறதா அல்லது துணை பொதுச் செயலாளர் கையில் இருக்கிறதா?

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தலைவரா அல்லது இரண்டு தலைவர்களா? கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியை பற்றி பேசிய பிறகு ஒரே கட்சியில் இருவரும் இருக்கிறார்கள் என்றால் விசிக திருமாவளவன் கையில் இல்லை. தனது கட்சிக்கு நிதி வழங்கும் முக்கிய நபர் மீது கைவைக்க திருமாவளவன் தயாராக இல்லை. திமுக கூட்டணி எப்படி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

அம்பேத்கரை வைத்து தமிழகத்தில் அரசியல் வியாபாரம் நடக்கிறது. விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால் அவரோடு நானும் செல்வதற்கு தயாராக இருக்கிறேன். மணிப்பூரில் என்ன நடக்கிறது, அங்கிருக்கும் பழங்குடி மக்கள் யார்? காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அங்கு உயிரிழந்தோர் எத்தனை பேர்? தற்போது உயிரிழந்தோர் எத்தனை பேர்? போன்ற பொது அறிவு தகவல்களை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *