விஜய் மீது எந்த சங்கடமும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
”தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது எவ்வித சங்கடமும் இல்லை. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி. சூதாட்டத்தை ஆட விரும்புவோர் அரசியல் களத்தில் கலவரத்தை, குழப்பத்தை ஏற்படுத்துவர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறிவைக்கப்படுகிறது என்பதைவிட திமுக கூட்டணி குறிவைக்கப்படுகிறது என்றே சொல்ல வேண்டும்.
திமுக அழுத்தம் தருகிறது என்றால், முன்னதாகவே விழாவில் பங்கேற்க மாட்டேன் என சொல்லி இருப்பேன். விழாவில் பங்கேற்காதது, நான் சுயமாக எடுத்த முடிவு.