தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடங்க விழா நேற்று (பிப். 2) நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி என்று அதிமுகவையும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (பிப்.3) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

வெள்ளையா? கருப்பா?
அதற்கு பதிலளித்த அவர், “விஜய் தனது சம்பளம் எவ்வளவு என தெளிவுப்படுத்த வேண்டும். விஜய் வாங்குவது வெள்ளையா? கருப்பா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
நான் இவ்வளவு தான் சம்பளம் வாங்கினேன், இவ்வளவு வரி கட்டி இருக்கிறேன் என்று விஜயால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. அதனால் யார் யாரை விமர்சனம் செய்வது என்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டும்.