அதிமுக-பாஜக கூட்டணியால் அந்த அணியை ஆதரிக்க விரும்பாத சிறுபான்மையினா் விஜய்யை ஆதரிக்கக் கூடும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக அல்லது அதிமுக சாயலில் உள்ள அமமுகவுடன் கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ, தமிமுன்அன்சாரி தலைமையிலான மஜக உள்ளிட்டவற்றை ஆதரித்த இஸ்லாமியா்கள் விஜய்யை ஆதரிக்கக்கூடும்.
இவை தவிர அதிமுக, பாஜகவில் இருந்தும் விஜய் வாக்குகளை எடுக்கிறாா். அதிமுக, திமுக வேண்டாம் என்ற வாக்குகள்தான் நாதக, பாஜக ஆகியவற்றின் அடிப்படை வாக்குகள். இப்போது நாதக மட்டுமே திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உள்ள வாக்காளா்களுக்கான தோ்வாக உள்ளது. எனவே, அனைத்துக் கட்சிகளில் இருந்தும் தவெக வாக்குகளை பிரிக்கக்கூடும். இருப்பினும், பாமக, விசிக, திமுகவுக்கு தான் பேரிழப்பு.
பாஜக வாக்குகளில் மோடி, அண்ணாமலை, ஹிந்துத்துவ கொள்கைப் பற்று என்ற காரணிகள் இருப்பதால் அதில் இருந்து சரியும் வாக்குகள் குறைவாகத்தான் இருக்கும்.
வரும்காலத்தில் திமுக கூட்டணியில் ஒரே ஒரு செங்கல் உருவப்பட்டால்கூட களச் சூழல் மாறிவிடும். திமுக கூட்டணி யில் உள்ள சில கட்சிகள் சென்றால்கூட கடுமையான மும்முனைப் போட்டி உருவாகும்.