விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை | Bomb threat to Vijay house

Spread the love

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூரில் சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த இந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் விஜய் வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? எங்கிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் நேற்று நெரிசலால் பலர் உயிரிழந்த நிலையில் இன்று விஜய் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *