விஜய் ஹசாரே டிராபி: உ.பி. அணியை வழிநடத்தும் ரிங்கு சிங்!

Dinamani2f2024 12 202f6rhc5jvp2fnbs8486grinku Singh Bcci625x30028may24.webp.jpeg
Spread the love

விஜய் ஹசாரே தொடரில் உத்தரப் பிரதேச அணிக்கு ரிங்கு சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடிவரும் ரிங்கு சிங் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி மிகவும் பிரபலமானார். அதன்பின்னர் இந்திய அணிக்கு தேர்வானார்.

டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் 50 ஓவர் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் உத்தரப் பிரதேச அணியை ரிங்கு சிங் வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் அணியை வழிநடத்திய அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரிடம் இருந்து அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

புவனேஷ்வர் தலைமையிலான உத்தரப்பிரதேச அணி காலிறுதியில் தில்லிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது.

உபி.டி20 போட்டியில் மீரட் மேவரிக்ஸ் அணியை வழிநடத்திய ரிங்கு சிங் 9 இன்னிங்ஸ்களில் 161.54 ஸ்ட்ரைக் ரேட்டில் 210 ரன்கள் எடுத்திருந்தார்.

ரிங்கு சிங் இந்தியாவுக்காக 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், முதல்தர போட்டிகளில் 52 இன்னிங்ஸ்களில் 1,899 ரன்களை குவித்துள்ளார். அதில் 1 சதம், 17 அரை சதங்களும் அடங்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *