நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
அந்தப் படம் திரைகளில் வெளியாகி முதல் நான்கு நாள்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசி திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: எனது வாழ்க்கையில் பல காதலர்கள் இருந்துள்ளார்கள்..! மனம் திறந்த ரெஜினா!
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.