தவெக தலைவர் விஜய் நேற்று (டிச.18) ஈரோடு சென்றிருந்தார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கு சம்மந்தம் இல்லாதவர்கள் குறித்து எல்லாம் பேச மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று ( டிச.19) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜனிடம் விஜய்யின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “தவெக தலைவர் விஜய் ஈரோட்டை மஞ்சள் நகரம் என்று சொல்லியிருக்கிறார்.
அந்த மஞ்சளுக்கான வாரியத்தை அமைத்தது மத்திய பாஜக அரசுதான். எனவே மஞ்சள் நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
விஜய் தன்னுடைய 10 வயதிலிருந்து மக்களுடன் இணைப்பில் இருப்பதாக கூறுகிறார்.